தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரேஷன் விற்பனையாளர்கள்  பதவி உயர்வு இழுத்தடிப்பு

ரேஷன் விற்பனையாளர்கள்  பதவி உயர்வு இழுத்தடிப்பு

ரேஷன் விற்பனையாளர்கள்  பதவி உயர்வு இழுத்தடிப்பு


UPDATED : ஜூன் 27, 2026 03:58 PM

ADDED : ஜூன் 27, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2026 03:58 PM ADDED : ஜூன் 27, 2026 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:கூட்டுறவு சங்கங்களில் ரேஷன் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வு இழுத்தடிப்பு செய்யப்படுவதாக பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் செயலாளர், எழுத்தர் உதவி எழுத்தர் பணியிடங்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் உள்ளனர். இதில் சங்கத்தில் உதவி எழுத்தர் பணியிடம் காலியாக இருந்தால் கல்வித் தகுதியாக அடிப்படையாக கொண்டு ரேஷன் விற்பனையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால், மாவட்டத்தில் சில கூட்டுறவு சங்கங்களில் உதவி எழுத்தர் பணியிடம் காலியாக இருந்தாலும் கவனிப்புகளை எதிர்பார்த்து பதவி உயர்வு வழங்காமல் இழுத்தடிப்பு செய்கிறார்கள். இது பற்றி துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. சில கூட்டுறவு சங்க செயலர்கள் தங்களுக்கு தேவையான நபர்களை உதவி எழுத்தர்களாக நியமிக்க முயற்சிக்கின்றனர். கூட்டுறவு சங்க விதிகளின்படி தகுதி உடைய ரேஷன் விற்பனையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேஷன் விற்பனையாளர்கள் கோரியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us