ADDED : பிப் 11, 2026 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகம் முன் பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும், பொருட்களை பொட்டலமாக வழங்கவும், சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைகடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகி அழகர்சாமி முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் பொன்அமைதி, நிர்வாகிகள் காமாட்சி முருகேசன், பாண்டி, முத்துராயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 219 பேர் விடுப்பெடுத்திருந்தனர்.
மாவட்டத்தில் 280 ரேஷன் கடைகள் செயல்படவில்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதிக்கப் பட்டது.

