ADDED : பிப் 12, 2026 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அலுவலகம் முன் ரேஷன் பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில்,
ரேஷன் கடைகளுக்கு வழங்கும் பொருட்கள் சரியான எடையில், தரமான பொருட்களை வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப ஊதியத்தை மாற்றி அமைத்து வழங்க வேண்டும்.
தாயுமானவர் திட்டத்தில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள் வழங்கும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை பணியாளர்கள் இரண்டாம் நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்றனர்.

