ADDED : ஏப் 23, 2025 07:05 AM
தேனி : ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று முதல் 3 நாட்கள் முப்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும், பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும், தராசுடன் பி.ஓ.எஸ்., கருவியை இணைப்பது போல் நுகர்பொருள் வாணிப கழக தராசுகளிலும் கணினியோடு இணைக்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் வேலை நிறுத்தத்தை நேற்று துவங்கினர்.மாவட்டத்தில் மொத்தம் 403 முழுநேர ரேஷன்கடைகள் உள்ளன. இதில் 362 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் 197 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் ரேஷன் கடைகள் மூடப்பட்டு பொருட்கள் வினியோகம் பாதித்தது. 197 கடைகள் செயல்படவில்லை

