/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு
/
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு
ADDED : டிச 18, 2025 01:48 AM
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 1200 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் கிடைக்கும் நீர் வைகை அணையில் தேக்கப்படுகிறது. வைகை அணையில் கடந்த சில மாதங்களாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. டிசம்பர் 15ல் ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக 2ம் கட்டமாக வினாடிக்கு 1500 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது.
திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று காலை 9:00 மணிக்கு வினாடிக்கு 1200 கன அடியாக குறைக்கப்பட்டது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக ஏற்கனவே வினாடிக்கு 1900 கன அடியும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடியும் வெளியேற்றப்படுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 61.52 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி.நீர்வரத்து வினாடிக்கு 1504 கன அடி.

