/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு பூக்கடைகள் அகற்றம்
/
தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு பூக்கடைகள் அகற்றம்
தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு பூக்கடைகள் அகற்றம்
தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு பூக்கடைகள் அகற்றம்
ADDED : டிச 24, 2025 06:00 AM

தேனி: தேனி நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தற்காலிகமாக அமைக்கபட்ட 11 பூக்கடைகள் நேற்று போலீசார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
தேனி பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் 2023ல் ராஜாவாய்க்கால் ஆக்கிரமிப்பில் இருந்த நகராட்சி கட்டடம் நீர்வளத்துறையால் அகற்றப்பட்டன. அங்கு பூக்கடை நடத்திய வியாபாரிகள் வேறு இடத்திற்கு சென்றனர். இதில் 11 பேர் பஸ் ஸ்டாண்டில் இருந்து சுப்பன் தெரு செல்லும் பகுதியில் தற்காலிக தகர கடைகளை அமைத்தனர். இந்நிலையில் நகராட்சி கமிஷ்னர் பார்கவி ஆக்கிரமிப்பாளர்கள் 11 பேருக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனாலும் வியாபாரிகள் கடைகளை அகற்ற முன்வரவில்லை. நேற்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. முன்னதாக மண் அள்ளும் இயந்திரம் நிறுத்தப்பட்டது. நகராட்சி ஆர்.ஐ., முனிராஜ், நகரமைப்பு அலுவலர் சலீம், ஆர்.ஐ.,க்கள் வருவாய் ஆய்வாளர்கள் ராமசாமி, முனீஸ்வரன் தேனி இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணி துவங்கினர். முன்புறம் இருந்த பூக்கடை உரிமையாளர்கள் தானாகவே அகற்றினர். ஒரிருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பேச்சுவார்த்தை நடத்தும் முன் கடைகளை அகற்றக்கூடாது என்றனர். அதற்கு இன்ஸ்பெக்டர் எதிர்ப்பு தெரிவித்து, கமிஷனரிடம் பேச கூறினார். பின் கலெக்டர் உத்தரவில் 11 கடைகளும் போலீசார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

