/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒட்டான்குளம் கண்மாய் தண்ணீர் வரத்துக்காக 18ம் கால்வாயில் அமைத்திருந்த ஷட்டர் அகற்றம் - அறிவிப்பு இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி

ADDED : அக் 15, 2025 07:08 AM

கூடலுார்; கூடலுார் மந்தை வாய்க்கால் அருகே ஒட்டான்குளம் கண்மாய் நீர்வரத்துக்காக 18ம் கால்வாயின் குறுக்கே அமைத்திருந்த ஷட்டர் திடீரென அகற்றப்பட்டது. விவசாயிகளுக்கு எவ்வித அறிவிப்பும் தெரிவிக்காமல் அகற்றியதால் 'ஷாக்' ஆயினர்.
கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. இக் கண்மாய்க்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து கூட்டாறு பாலம் வழியாகவும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் இருந்தும் நீர்வரத்து இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு நீர்வீழ்ச்சி அருகே ஏற்பட்ட மண் சரிவால் நீர்வரத்து பாதை மாறி முல்லைப் பெரியாற்றில் கலந்தது.
மற்றொரு நீர் வரத்து பாதையான கூட்டாறு பாலமும் பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் ஒட்டான்குளம் கண்மாய்க்கு நீர்வரத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 2012- -2013ல் அப்போது எம்.எல்.ஏ.,வாக இருந்த தங்க தமிழ் செல்வன் தனது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மந்தை வாய்க்கால் அருகே 18ம் கால்வாயின் குறுக்கே ஷட்டர் அமைக்கப்பட்டது. கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது ஷட்டரில் இருந்து மாற்று பாதை மூலம் ஒட்டான்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஷட்டர் நேற்று முன்தினம் திடீரென அகற்றப்பட்டது. விவசாயிகளுக்கு எவ்வித தகவல் இல்லாததால் குழம்பினர்.
உதவி செயற்பொறியாளர் சாலமன் கூறும் போது:
ஷட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்ததால் கால்வாயில் தண்ணீர் முழுமையாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஷட்டர்கள் அகற்றப்பட்டுள்ளது. கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டவுடன் அதே பகுதியில் புதிதாக ஷட்டர் அமைக்கப்படும். ஒட்டான்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் எந்த தடையும் ஏற்படாது என்றார்.