/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சீரமையுங்கள் கண்மாய்களில் தண்ணீர் வீணாவதால் மதகுகளை சீரமையுங்கள்! நீர் வளத்துறை கரைகளை பராமரிக்க வலியுறுத்தல்
/
சீரமையுங்கள் கண்மாய்களில் தண்ணீர் வீணாவதால் மதகுகளை சீரமையுங்கள்! நீர் வளத்துறை கரைகளை பராமரிக்க வலியுறுத்தல்
சீரமையுங்கள் கண்மாய்களில் தண்ணீர் வீணாவதால் மதகுகளை சீரமையுங்கள்! நீர் வளத்துறை கரைகளை பராமரிக்க வலியுறுத்தல்
சீரமையுங்கள் கண்மாய்களில் தண்ணீர் வீணாவதால் மதகுகளை சீரமையுங்கள்! நீர் வளத்துறை கரைகளை பராமரிக்க வலியுறுத்தல்
ADDED : நவ 08, 2025 01:40 AM

பெரியகுளம்:
தேனி மாவட்டத்தில் உள்ள குளம், கண்மாய்களில் மதகுகள் பராமரிப்பு இன்றி சேதமடைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் நீரினை சேமிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. நீர் வளத்துறையினர் மதகுகள், கரைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் முல்லை பெரியாறு, மூல வைகையாறு, வராகநதி, மஞ்சளாறு, பாம்பாறு, கொட்டக்குடி ஆறு என முக்கிய ஆறுகள், 122 கண்மாய்கள், குளங்கள் உள்ளன. பெரியாறு நீர்வளக்கோட்டம், மஞ்சளாறு வடிநிலகோட்டம் சார்பில் பல கண்மாய்கள் உள்ளன. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் குளங்கள் ஊரணிகள் உள்ளன. மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நீர் நிலைகள் முறையான பராமரிப்பு உள்ளது. இதனால் பல கண்மாய்களில் நீர் வரத்து வாய்க்கால் பராமரிப்பு இன்றி பலவீனமாக உள்ளன. இதனால் கண்மாய்களில் முழுமையாக நீரை தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டு விவசாயமும் பாதிக்கும் நிலை உள்ளது. மழை காலத்திற்கு முன்பே கண்மாய் பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை.
மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்திற்கு உட்பட்ட பெரியகுளம் நந்தியாபுரம் கண்மாய், பொட்டைக்குளம் கண்மாய், லக்கியம்பட்டி கண்மாய், பொட்டை வண்ணான் குளம், நெடுங்குளம் ஆகிய 800 ஏக்கர் பரப்பளவு உடைய 5 கண்மாய்களில் நீர் வரத்து இன்றி வறண்டுள்ளது. இதனால் இந்த கண்மாய் நீரினை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது.
மதகுகளில் தடுப்புகள் இல்லை:
தாமரைக்குளம் கண்மாய் 50 ஏக்கர் பரப்பளவு உடையது. இக் குளத்திற்கு சோத்துப்பாறை அணையில் இருந்தும் தண்ணீர் கிடைக்கிறது. கண்மாயில் தேங்கும் நீரினை பயன்படுத்தி 500 ஏக்கரில் நெல், கரும்பு,வாழை சாகுபடி செய்யப்படுகிறது. கண்மாய் நிரம்பி உபரிநீர் வெளியே செல்லும் வகையில் 6 அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில் 10 மதகு தடுப்புகள் இருந்தன. அவை திருடபட்டுள்ளது. இதனால் கண்மாய் நிரம்பியவுடனே தண்ணீர், மதகு வழியாக தண்ணீர் வெளியேறும். மதகுகளில் தடுப்பு இல்லாததால் தேவைக்கு ஏற்ப நீரை பயன்படுத்த முடியவில்லை. மதகு தடுப்புகள் அமைக்க விவசாயிகள் பல மாதங்களாக தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
வீணாகும் பாசன நீர்
தாமரைக்குளம் ஆயக்கட்டு தலைவர் முத்துசாமி கூறுகையில்,' வடகிழக்கு பருவமழை காலங்களில் கண்மாயில் தேங்கும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படும். தற்போது மதகுகளில் தடுப்பு இல்லாததால் தண்ணீர் வீணாகி ஆற்றில் செல்கிறது. உடனடியாக மதகுகளுக்கு தடுப்பு அமைக்க வேண்டும். நீர்வளத்துறையினர் பலவீனமான கண்மாய் கரைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--

