/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் 13 குளங்களுக்கு குழாய் மூலம் நீர் நிரப்பும் திட்டம்; ரூ.353 கோடிக்கு அறிக்கை சமர்ப்பிப்பு
/
ஆண்டிபட்டியில் 13 குளங்களுக்கு குழாய் மூலம் நீர் நிரப்பும் திட்டம்; ரூ.353 கோடிக்கு அறிக்கை சமர்ப்பிப்பு
ஆண்டிபட்டியில் 13 குளங்களுக்கு குழாய் மூலம் நீர் நிரப்பும் திட்டம்; ரூ.353 கோடிக்கு அறிக்கை சமர்ப்பிப்பு
ஆண்டிபட்டியில் 13 குளங்களுக்கு குழாய் மூலம் நீர் நிரப்பும் திட்டம்; ரூ.353 கோடிக்கு அறிக்கை சமர்ப்பிப்பு
ADDED : அக் 23, 2025 03:36 AM
தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள 13 குளங்களுக்கு முல்லைப்பெரியாறு உபரி நீரை குழாய் மூலம் கொண்டு வந்து நிரப்ப நீர்வளத்துறையினர் ரூ. 353 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் அமைந்துள்ளது.
ஆனாலும் இந்த தாலுகாவில் உள்ள பல கிராமங்களில் இன்றளவும் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது.
இதனால் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வேலை தேடி வெளியூர் செல்லும் நிலை உருவாகி உள்ளது.
விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பும் குறைந்து வருகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள 9 கிராமங்களில் 13 குளங்களுக்கு முல்லைப்பெரியாறு உபரி நீரினை குழாய் மூலம் கொண்டு வந்து நிரப்ப இப் பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை பரிசீலித்த நீர்வளத்துறை திட்ட வடிவமைப்பு கோட்டத்தினர் ரூ. 353 கோடி மதிப்பீட்டிற்கு அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேலக்கூடாலுார் முல்லைப்பெரியாற்றில் இத்திட்டம் துவங்குகிறது. அங்கிருந்து சுமார் 74 கி.மீ., துாரத்திற்கு குழாய் பதிக்கப்பட உள்ளது. ஏத்தகோவில் அருகே குழாய் பதிக்கும் பணி முடியும். இந்த திட்டம் பாசனத்திற்கு நீர் வழங்கும் திட்டம் ஆகும்.
இதன் மூலம் ஆண்டிபட்டி தாலுகாவில் மொட்டனுத்து ஆசாரிபட்டி குளம், ராஜதானி புல்வெட்டிகுளம், அதிகாரிகுளம், ஆண்டிபட்டிகுளம், ஜம்புலிபுதுார் குளம், ஜி.உசிலம்பட்டி குளம், மரிக்குண்டு கன்னிமார்குளம், வள்ளல்நதி கண்டமனுார் புதுக்குளம், கோத்தலுாத்து கதராயபெருமாள் குளம், ஏத்தகோவில் குளம், தேக்கம்பட்டி அரண்மணைகுளம், தேக்கம்பட்டி குளம், மொட்டனுாத்து மும்மூர்த்தி கோவில் குளம் ஆகிய குளங்கள் நிரப்பட உள்ளன.
இந்த குளங்கள் நிரப்பபடுவதால் 2139 கிணறுகள், 1002 ஆழ்துளை கிணறுகள் பயன்பெறும் என்றனர்.