தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ உண்டு உறைவிட பள்ளியை மாற்றி அமைக்க கோரிக்கை

உண்டு உறைவிட பள்ளியை மாற்றி அமைக்க கோரிக்கை

உண்டு உறைவிட பள்ளியை மாற்றி அமைக்க கோரிக்கை


UPDATED : ஜூலை 18, 2026 04:14 PM

ADDED : ஜூலை 18, 2026 03:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2026 04:14 PM ADDED : ஜூலை 18, 2026 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி:போடி அருகே கொட்டகுடியில் இயங்கி வரும் உண்டு உறைவிட பள்ளியை சிறக்காடு மலைக் கிராமத்திற்கு மாற்றி அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சிறக்காடு மலைக் கிராமம். 40 க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின குடும்பங்கள் வசிக்கின்றனர். இக் கிராமம் போடியில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது. பஸ் வசதி இல்லாததால் இங்கு உள்ள 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போடி பள்ளிகளுக்கு ஆட்டோ மூலம் சென்று வருகின்றனர். ஆட்டோவில் செல்வதால் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் சில மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர். மினி பஸ் இயங்கவில்லை.

இந்நிலையில் கொட்டகுடி மலைக் கிராமத்தில் இயங்கி வரும் உண்டு உறைவிட பள்ளியில் போதிய மாணவர்கள் இல்லாமல் 4 பேர் மட்டுமே படிக்கின்றனர். எனவே சிறக்காடு மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொட்டகுடியில் இயங்கி வரும் உண்டு உறைவிட பள்ளியை சிறக்காடு மலை கிராமத்திற்கு மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us