/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சபரிமலை சீசன் துவங்குவதால் கம்பமெட்டு ரோடை பராமரிக்க கோரிக்கை
/
சபரிமலை சீசன் துவங்குவதால் கம்பமெட்டு ரோடை பராமரிக்க கோரிக்கை
சபரிமலை சீசன் துவங்குவதால் கம்பமெட்டு ரோடை பராமரிக்க கோரிக்கை
சபரிமலை சீசன் துவங்குவதால் கம்பமெட்டு ரோடை பராமரிக்க கோரிக்கை
ADDED : நவ 09, 2025 06:09 AM
கம்பம்: சபரிமலை சீசன் துவங்குவதால் குண்டும், குழியுமாக உள்ள கம்பமெட்டு ரோட்டை பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவை இணைக்க போடிமெட்டு, குமுளி மற்றும் கம்பமெட்டு ரோடுகள் உள்ளன.
இரு மாநில எல்லையாக இருப்பதால் மூன்று ரோடுகள் வழியாகவும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் விவசாயிகள், வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இதில் கம்பமெட்டு ரோட்டில் அதிக வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக சபரிமலை சீசனில் கோயிலிற்கு பக்தர்கள் செல்ல ஒரு வழிப்பாதையாகவும் பயன்படுகிறது. தற்போது சபரிமலை சீசன் துவங்க உள்ளது. பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரத் துவங்கு வார்கள்.
கடந்த 2 மாதங்களாக கம்பமெட்டு ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
ரூ.4 கோடி மதிப்பீடு தயார் செய்து அனுப்பி இருப்பதாகவும், விரைவில் அனுமதி கிடைக்கும் என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
ஆனால், மதிப்பீடு களுக்கு அனுமதி கிடைப்பதில் இழுபறி நிலை உள்ளது.
எனவே, சபரிமலை சீசன் துவங்க உள்ளதை கருத்தில் கொண்டு, கம்பமெட்டு ரோட்டை தற்காலிகமாக பராமரிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

