UPDATED : ஜூன் 08, 2026 10:05 PM
ADDED : ஜூன் 08, 2026 10:02 PM
அ நிறம் | அளவு
தேனி:வைகை அணையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு நிறுவனர் ராஜன், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென்மண்டல செயலாளர் முத்துராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களது மனுவில்,' வைகை அணையில் பல ஆண்டுகளாக தேங்கிய வண்டல் மண் படிவங்களால் நீர் தேக்கும் அளவு குறைந்துள்ளது. தற்போது நீர் மட்டம் குறைந்துள்ளதால் துார்வாரும் பணிகளை மேற்கொள்ள நல் வாய்ப்பாக உள்ளது. துார்வாரினால், நீர் தேக்கும் அளவு அதிகரிக்கும். தென் தமிழகத்தின் பாசன, குடிநீர் தேவைக்க நீண்டகால பலனிக்கும்,' என தெரிவித்துள்ளனர்.
