/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காபி விதைகள் பெற முன்பதிவு அவசியம்
/
காபி விதைகள் பெற முன்பதிவு அவசியம்
ADDED : நவ 09, 2025 07:15 AM
போடி: காபி விதைகள் தேவைப்படும் விவசாயிகள் முன் பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ளுமாறு போடி காபி வாரிய இளநிலை தொடர்பு அலுவலர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இளநிலை தொடர்பு அலுவலர் கூறுகையில்: போடி அருகே அகமலை, குரங்கணி, கொட்டகுடி, வடக்குமலை, போடிமெட்டு உள்ளிட்ட மலைக் கிராமங்களில் காபி அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளன. இதனையொட்டி மத்திய அரசின் காபி வாரியம் ஆண்டு தோறும் உற்பத்தியை பெருக்கும் வகையில் காபி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த விதை செடிகள் ஒரே மாதிரியான, இனத்தூய்மை, உற்பத்தி, தரம், இலைத் துருநோய் தாங்கும் நிலை உடையது. தற்போது இந்த ஆண்டு பருவத்திற்கு தேவையான அரபிக்கா , ரொபஸ்டா காபி ரக விதைகள் வழங்கப்படுகிறது. காபி விதை தேவைப்படும் விவசாயிகள் கிலோவிற்கு ரூ.500 வீதம் காபி வாரிய அலுவலகத்தில் முன் பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். காபி விதைக்கான முன் பணத்தை விண்ணப்பத்துடன் நவ.14ம் தேதிக்குள் போடி காபி வாரிய அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

