/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மழைக்காலத்தில் வீட்டிற்குள் வரும் வால்புழுக்களால் அவதி: அரண்மனைப்புதுார் ஊராட்சி 2வது வார்டு குடியிருப்போர் குமுறல்
/
மழைக்காலத்தில் வீட்டிற்குள் வரும் வால்புழுக்களால் அவதி: அரண்மனைப்புதுார் ஊராட்சி 2வது வார்டு குடியிருப்போர் குமுறல்
மழைக்காலத்தில் வீட்டிற்குள் வரும் வால்புழுக்களால் அவதி: அரண்மனைப்புதுார் ஊராட்சி 2வது வார்டு குடியிருப்போர் குமுறல்
மழைக்காலத்தில் வீட்டிற்குள் வரும் வால்புழுக்களால் அவதி: அரண்மனைப்புதுார் ஊராட்சி 2வது வார்டு குடியிருப்போர் குமுறல்
ADDED : அக் 29, 2025 09:24 AM

தேனி: அரண்மனைப்புதுார் ஊராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சாக்கடை சரிவர துார்வாராததால் மழைகாலத்தில் வீடுகளுக்குள் வால்புழுக்கள் நுழைவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி குடியிருப்போர் புகார் கூறுகின்றனர்.
அரண்மனைப்புதுார் ஊராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு எடிசன் தெரு குடியிருப்போர் கலைவாணி, பாக்கியலட்சுமி, விஜயா, பரமேஸ்வரி ஆகியோர் கூறியதாவது:
ஊராட்சி சார்பில் சில ஆண்டுகளுக்கு முன் பழைய சாக்கடையின் மீது புதிய சாக்கடை அமைத்தனர். ஆனால், அதனை துார்வாரவில்லை.
மழை பெய்யும் நாட்களில் மெயின் ரோட்டில் உள்ள சாக்கடையில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு எடிசன் தெரு பகுதிக்குள் கழிவுநீர் மழை நீருடன் தேங்குகிறது.
மழைநீர் வடிந்த சில நாட்களில் சாக்கடைகளில் அதிகம் புழுக்கள் காணப்புடுகின்றன. சில நேரங்களில் சாக்கடையில் இருந்து வால்புழுக்கள் வீடுகளுக்குள் வருகின்றன. துர்நாற்றமும் வீசுகிறது.
இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் கிராமசபை கூட்டடங்களிலும் பலமுறை புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவதில்லை.
பணியாளர்கள் இல்லாததால் பணி நடக்கவில்லை சாக்கடை மாத கணக்கில் துார்வாராததால் கொசுக்கள் அதிகரிக்கின்றன. கொசுமருத்து தெளிக்க நடவடிக்கை எடுங்கள் என ஊராட்சி அலுவலகத்தில் கூறுகிறோம்.
போதிய பணியாளர்கள் இல்லாததால் துார்வாரும் பணி, வீடுகளில் குப்பை சேகரிக்கும் பணி செய்ய மேற்கொள்ள முடியவில்லை என அலுவலர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில மாங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்ய வில்லை. வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் குடிநீர் வினியோகித்தாலும் அதிகபட்சம் ஒருமணிநேரம் கூட தண்ணீர் வருவது இல்லை.
இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தெருவில் இரு இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பங்கள் உள்ளன. இதனால் அவசர காலங்களில் ஆட்டோ, டூவீலர்கள் தெருக்களில் வர இயலவில்லை.
அரண்மனைப்புதுார் சத்திரப்பட்டி ரோட்டில் தெருநாய்கள் அதிகரித்துள்ளன. இரவில் அவ்வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை தொடர்கிறது. பல தெருநாய்கள் நோயுடன் சுற்றி வருகின்றன.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாய் ஒன்று மட்டுமே உள்ளது. இது போதுமானதாக இல்லை. கூடுதலாக ஒரு குழாய் அமைத்து அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருநாய்களை கட்டுப்படுத்தஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடையை துார்வாரி, மின்கம்பங்களை இடம் மாற்றி இடையூறு இன்றி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

