/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல்லில் ஈரப்பதம் அதிகரிக்க தீர்மானம்
/
நெல்லில் ஈரப்பதம் அதிகரிக்க தீர்மானம்
ADDED : அக் 23, 2025 05:30 AM
உத்தமபாளையம்: ேதனி மாவட்டத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அக் 17 ல் பெய்த கனமழையால் கம்பம் பள்ளத்தாக்கில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மிதக்கிறது. அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
இது குறித்து விவாதிப்பதற்கு உத்தமபாளையத்தில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க அவசர கூட்டம் தலைவர் தர்வேஷ் முகைதீன் தலைமையில் நடந்தது. கருங்கட்டான் குளம் விவசாயிகள் சங்க தலைவர் விஜயராஜன் முன்னிலை வகித்தார். கம்பம் தலைவர் நாராயணன் வரவேற்றார். கூட்டத்தில், வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.டெல்டா மாவட்டங்களை போன்று நெல் ஈரப்பதம் 22 சதவீதமாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்.
உடைந்த வாய்க்கால்களை உடனே பராமரிப்பு செய்திட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சின்னமனூர் தலைவர் ராஜா, கூடலூர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சீலையம்பட்டி ஆம்ஸ்ட்ராங், கம்பம் செயலாளர் சுகுமாறன், நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன், வீரபாண்டி மாரிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை செயலாளர் சகுபர் அலி ஒருங்கிணைத்தார்.