/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன் கார்டு ஒன்றுக்கு மாதந்தோறும் 5 கிலோ தேங்காய் வழங்க தீர்மானம்
/
ரேஷன் கார்டு ஒன்றுக்கு மாதந்தோறும் 5 கிலோ தேங்காய் வழங்க தீர்மானம்
ரேஷன் கார்டு ஒன்றுக்கு மாதந்தோறும் 5 கிலோ தேங்காய் வழங்க தீர்மானம்
ரேஷன் கார்டு ஒன்றுக்கு மாதந்தோறும் 5 கிலோ தேங்காய் வழங்க தீர்மானம்
ADDED : நவ 18, 2025 04:34 AM
சின்னமனுார்: நாம் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ தேங்காய் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாம் இயக்கத்தின் (தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்) மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி சின்னமனுாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன் தலைமை வகித்தார். சேலம் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தேனி நகரச் செயலாளர் முருகன் வரவேற்றார்.
மாநில தலைவர் பிரபுராஜா சிறப்புரை ஆற்றினார். மாநில பொருளாளராக பத்மநாபன் ஏற்புரை வழங்கினார். கோவை மண்டலச் செயலாளராக துரைராஜ், தேனி மண்டலச் செயலாளராக கவிதாலயா சரவணன் உள்ளிட்ட பலர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் ரேஷன் கார்டு ஒன்றுக்கு மாதம் 5 கிலோ தேங்காய் வழங்க வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு தென்னை, பனை மரங்கள் ஏற ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

