ADDED : பிப் 16, 2026 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நகராட்சி அலுவலகம் முன் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பரமேஸ்வரன், கருப்பையா, நடராஜன், பாண்டி, வீரணன், சவுகத்அலி, முகமது ஷரீப், பாலுச்சாமி, மின்வாரிய தொழிலாளர் சங்க நிர்வாகி சந்திரசேகரன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

