UPDATED : ஜூன் 06, 2026 11:05 PM
ADDED : ஜூன் 06, 2026 11:03 PM
அ நிறம் | அளவு
தேனி:கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜா அழகணனுக்கு பாராட்டு விழா தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடந்தது. இந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜன் தலைமை வகித்தார்.
கூட்டுறவு சார்பதிவாளர்கள் சிவக்குமார், கருப்பத்துரை, முன்னிலை வகித்தனர். பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், ராஜசேகரன், பாண்டியராஜ், பாலமுருகன், ரிச்சர்ட் செல்வின், டாக்டர்கள் ஜீவா, பாலமுருகன், அரிமா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜமோகன், வழக்கறிஞர்கள் சந்தான கிருஷ்ணன், செல்வக்குமார், வர்த்தக பிரமுகர்கள் ஜெய்பிரகாஷ், சுந்தர வடிவேல், வெங்கடேஷ், ராஜேந்திரன், முருகன், பிச்சை, சந்தோஷ்குமார், பரணி, வேலர் பங்கேற்று வாழ்த்தினர். ராஜா அழகணன்,ராஜேஸ்வரி ஏற்புரையாற்றினர்.
