ADDED : ஜன 19, 2026 06:06 AM

போடி: போடி துரைராஜபுரத்தில் பஸ்கள் நிற்காததை கண்டித்து நடந்த ரோடு மறியலில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடி--- -- தேனி மெயின் ரோட்டில் துரைராஜபுரம் அமைந்துள்ளது.
இங்கு 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வெளியூர் பஸ்கள் தவிர மற்ற அனைத்து பஸ்களும் நின்று செல்லும். இந்நிலையில் நேற்று பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூர் செல்வதற்காக துரைராஜபுரம் பஸ் ஸ்டாப்பில் பொதுமக்கள் பஸ்சிற்காக காத்திருந்தனர்.
பஸ்கள் ஸ்டாப்பில் நிற்காமல் சென்றன. இதனால் ஆத்திரம் அடைந்த இப்பகுதி மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போடி டி.எஸ்.பி., சுனில், அரசு போக்குவரத்து கழக டெப்போ மேலாளர் ராஜா பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். துரைராஜபுரம் பஸ் ஸ்டாப்பில் அனைத்து பஸ்களும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். ரோடு மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
