UPDATED : நவ 24, 2026 08:45 PM
ADDED : நவ 24, 2026 08:38 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதாக கூறி கெங்குவார்பட்டி–- ஜி.கல்லுப்பட்டி தும்மலப்பட்டி ரோட்டில் பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திராவிடச்செல்வி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
