நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம், உத்தமபாளையம் அணைப்பட்டி ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சப்ளை இல்லை. இதனை கண்டித்து நேற்று மாலை 5 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் மெயின் ரோட்டில் அமர்ந்து ரோடு மறியல் செய்தனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ரோடு மறியல் போராட்டத்தை ராயப்பன்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

