தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்பத்தில் ரோடு மறியல்

கம்பத்தில் ரோடு மறியல்

கம்பத்தில் ரோடு மறியல்


UPDATED : ஆக 30, 2026 03:33 PM

ADDED : ஆக 30, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 03:33 PM ADDED : ஆக 30, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்:கம்பத்தில் சிறுமியின் தற்கொலைக்கு காரணமான இளைஞரை கைது செய்ய வலியுறுத்தி சிறுமி குடும்பத்தினர்,உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

கம்பம் ஆங்கூர் பாளையம் ரோட்டில் வசித்த 17 வயது சிறுமி சில தினங்களுக்கு முன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் தெற்கு போலீசார் மாணவி கல்லுாரி படிக்க விருப்பமில்லாமல் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சிறுமியின் அலைபேசியை பெற்றோர் பார்த்த போது உத்தமபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞர், சிறுமிக்கு தொல்லை கொடுத்தது தெரிந்தது. அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்ய போலீசாரை சிறுமி குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

போலீசார் நடவடிக்கை எடுக்க கால தாமதம் செய்வதாக கூறி சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் கம்பம் நகர், பைபாஸ் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானத்தை ஏற்க மறுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ., ஜெகநாத்மிஸ்ரா மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேசினார். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சுமார் 3 மணிநேரம் நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us