/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டாப் ஸ்டேஷன் -- வட்டவடைக்கு விரைவில் ரோடு சீரமைப்பு
/
டாப் ஸ்டேஷன் -- வட்டவடைக்கு விரைவில் ரோடு சீரமைப்பு
டாப் ஸ்டேஷன் -- வட்டவடைக்கு விரைவில் ரோடு சீரமைப்பு
டாப் ஸ்டேஷன் -- வட்டவடைக்கு விரைவில் ரோடு சீரமைப்பு
ADDED : அக் 09, 2025 04:07 AM
போடி : போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சி டாப் - ஸ்டேஷன் மலைக் கிராமம். இப்பகுதிக்கு மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். தினமும் 200 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
குரங்கணியில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் டாப் -ஸ்டேஷன் அமைந்து உள்ளது. குரங்கணியில் இருந்து டாப்-ஸ்டேஷன் செல்ல ரோடு வசதி இல்லை. இதனால் கேரளா மூணாறு வழியாக 103 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மூணாறில் இருந்து வட்டவடை வழியாக டாப் - ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டும்.
வட்டவடை முதல் டாப் - ஸ்டேஷன் வரை 3 கி.மீ., தூரம் ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு ரோடு கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்களும் சிரமம் அடைகின்றனர்.
ரோடு வசதி செய்து தர கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சுற்றுலா பயணிகள், பொதுமக்களும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் டாப் - ஸ்டேஷன் - வட்டவடை வரை 3 கி.மீ., தூரம் ரோடு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.