ADDED : மார் 04, 2024 05:59 AM

அ நிறம் | அளவு
கூடலுார்: கேரளாவில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கூடலுார், கருநாக்கமுத்தன்பட்டி வழியாக அதிகம் செல்கின்றனர். அதேபோல் சுருளி அருவியில் இருந்து தேக்கடி உள்ளிட்ட கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இவ்வழியே வருகின்றனர்.
கூடலுார் துவக்கப் பகுதியில் ரோட்டிலேயே கழிவு நீர் ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் கழிவு நீரோடை முறையாக அமைத்து சுகாதாரக் கேட்டை தடுக்க முன் வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
