ADDED : பிப் 14, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : பாலியல் வழக்கு நீதிமன்றம் விசாரணை நடந்து வரும் நிலையில் மன உளைச்சலில் சாலைப்பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி 52. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தில் சாலை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் 2022ல் முத்துச்சாமி மீது பாலியல் வழக்கு பதிவானது.
தற்போது பணியில் இருந்தார். இவ் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் திண்டுக்கல்லிற்கு மீட்டிங் செல்வதாக வீட்டில் கூறியிருந்தார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-

