ADDED : செப் 26, 2025 02:29 AM
ஆண்டிபட்டி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்தவர் செல்வம் 21, இவர் மயிலாடும்பாறையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக க.விலக்கு பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 9:30 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள மறைவான இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியை எடுத்து காண்பித்து, தாங்கள் தேனியில் பெரிய ரவுடி என்றும் இரு சக்கர வாகனத்தில் ஏறி அமருமாறும் மிரட்டி உள்ளனர். க.விலக்கு கண்டமனூர் ரோட்டில் சில கி.மீ., தூரம் சென்றதும், இருசக்கர வாகனத்தை நிறுத்தி பணம் கேட்டு மீண்டும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் ரூ.2500, ஆண்ட்ராய்டு அலைபேசி ஆகியவற்றை பறித்து சென்றுவிட்டனர். செல்வம் புகாரில் க.விலக்கு போலீசார் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.