நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: புதுச்சேரி கொத்தபுரிநத்தம் தமிழரசன் 31.
எலக்ட்ரீசியன். தேனி திட்டச்சாலையில் தங்கி பணிபுரிந்து வந்தார். சொந்த ஊருக்கு சென்று நேற்று முன்தினம் அதிகாலை 3:20 மணிக்கு திட்டச்சாலை காஸ் குடோன் அருகே நடந்து சென்றார். டூவீலரில் வந்த 3 மர்ம நபர்கள் தமிழரசனிடம் பேசிவிட்டு தருவதாக அலைபேசியை கேட்ட போது அவர் தர மறுத்தார். அவரை மிரட்டி ரூ.150 பணம், ரூ.500 மதிப்புள்ள கட்டிங் பிளேடு, சுத்தியல், ஏ.டி.எம்.,கார்டு, பான்கார்டு ஆகியவற்றை பறித்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.