/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.1.72 கோடி மோசடி; நால்வர் மீது வழக்கு
/
ரூ.1.72 கோடி மோசடி; நால்வர் மீது வழக்கு
ADDED : ஆக 28, 2025 04:31 AM
தேனி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி குருசாமி. இவரது மகன்கள் மாரிச்சாமி, சுப்பிரமணியன், கண்ணன்.
இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் 8 சென்ட் நிலத்தை விற்று தருவதற்காக போடிதாசன்பட்டி பாண்டியன் பவர் வாங்கினார்.
ஒரு சென்ட் நிலத்தை ரூ.1.50 லட்சத்திற்கு வாங்கி கொள்வதாக ஜக்கம்பட்டி நாகராஜ், அவரது மனைவி பத்மா, மகன் மணிகண்டன், உறவினர் ஈஸ்வரி கூறினர். பதிவில்லா கிரைய ஒப்பந்தம் செய்தனர்.
பல்வேறு தவணைகளாக ரூ.1.40 கோடி வழங்கி, பாண்டியனிடம் இருந்த நிலத்தின் அசல் ஆவணங்களை வாங்கிச் சென்றனர்.
ஆனால் மீதத்தொகை ரூ.1.72 கோடியை தரவில்லை. பாண்டியன் புகாரில் நாகராஜ், பத்மா, மணிகண்டன், ஈஸ்வரி மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

