ADDED : மார் 18, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
போடி: போடி அருகே முந்தல் செக் போஸ்டில் வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் தலைமையில் நிலைக் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனி அருகே அம்மாபட்டியை சேர்ந்த சதீஷ் 30. இவர் தனியார் வங்கி பணியாளர். கேரளாவில் இருந்து செய்முறை பணத்தை பெற்று கொண்டு காரில் உரிய ஆவணம் இன்றி 1.85 லட்சத்தை தேனிக்கு கொண்டு வந்தார்.
இந்த பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினர் போடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
