ADDED : ஏப் 06, 2026 11:05 PM
அ நிறம் | அளவு
தேனி:தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
பெரியகுளம் தொகுதியில் ரூ. 2.18 லட்சம், ஆண்டிபட்டி தொகுதியில் ரூ.55 ஆயிரம் என மொத்தம் ரூ.2.73 லட்சத்தை பறிமுதல் செய்து சார்நிலை கருவூலங்களில் ஒப்படைத்தனர். மாவட்டத்தில் இதுவரை 4 தொகுதிகளில் ரூ.1.51 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
