/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எரிவாயு தகன மேடை அமைக்க ஒதுக்கிய நிதி ரூ.6 கோடி... திரும்பியது: பேரூராசிட்களில் போதிய விழிப்புணர்வு இல்லாத அவலம்
/
எரிவாயு தகன மேடை அமைக்க ஒதுக்கிய நிதி ரூ.6 கோடி... திரும்பியது: பேரூராசிட்களில் போதிய விழிப்புணர்வு இல்லாத அவலம்
எரிவாயு தகன மேடை அமைக்க ஒதுக்கிய நிதி ரூ.6 கோடி... திரும்பியது: பேரூராசிட்களில் போதிய விழிப்புணர்வு இல்லாத அவலம்
எரிவாயு தகன மேடை அமைக்க ஒதுக்கிய நிதி ரூ.6 கோடி... திரும்பியது: பேரூராசிட்களில் போதிய விழிப்புணர்வு இல்லாத அவலம்
ADDED : டிச 29, 2025 06:05 AM

தேனி:மாவட்டத்தில் 4 பேரூராட்சிகளில் எரிவாயு தகன மேடை அமைக்க அரசு நிதி ஒதுக்கியும், போதிய விழிப்புணர்வு இல்லாததால் சுமார் ரூ.6 கோடி நிதி அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்ட அவலம் நடந்துள்ளது.
இம்மாவட்ட உள்ளாட்சிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு அரசு, நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதனடிப்படையில் திட்டங்களின் அவசிய, அத்தியாவசியம் தெரியாமல் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை, திரும்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. இதில், இந்நிதியாண்டில் குச்சனுார், வீரபாண்டி, மார்க்கையன் கோட்டை, மேலசொக்கநாதபுரம் ஆகிய 4 பேரூராட்சிகளில் தலா ரூ.1.60 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. பேரூராட்சிகள் சார்பில் இடங்களை தேர்வு செய்யும் பணிகளும் நடந்தன. ஆனால், விழிப்புணர்வு இல்லாதது, சிலரின் தவறான வழி நடத்துதல் உள்ளிட்டவற்றால் சில அரசு திட்டங்களுக்கு பொது மக்களிடம் எதிர்ப்பு கிளம்பும். அதே போல் சரியான விழிப்புணர்வு இல்லாததால், இத்திட்டத்திற்கும் 4 பேரூராட்சிகளில் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து எதிர்ப்பு, அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்ததால் இந்த எரிவாயு தகன மேடை அமைக்கும் திட்டம் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் ரூ.6 கோடிக்கும் அதிகமான தொகை அரசுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இன்றைய நகரமயமாதல் சூழலில் எரிவாயு தகன மேடைகள் அவசியமாகி வருகின்றன. தொற்று நோய்கள் பரவுகின்ற போது, இறப்புகள் கூடுதலாக நிகழும் போது, அடக்கம் செய்ய கூடுதல் இடங்கள் தேவைப்படுகின்றன. எரிவாயு தகன மேடைகள் பயன்பாட்டில் இருந்தால் இதற்கு தீர்வாகின்றன. எரிவாயு தகனமேடை தொடர்பாக மாவட்டத்தில் உள்ள தகன மேடைகள் சரிவர பராமரிப்பதையும் கண்காணிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் பேரூராட்சி அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மூலம் இத்திட்டம் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும்.

