ADDED : ஆக 28, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி, ஆக.
29-
க.விலக்கு அமிர்தா கார்டன் பகுதியில் வசிப்பவர் லதா 55, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த மே 30 ல் இவரது அலைபேசிக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. குறிப்பிட்ட தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்டு எண் மற்றும் அது தொடர்பான கணக்கு விவரங்களை கேட்டுள்ளனர். அடுத்த சில வினாடிகளில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.84 ஆயிரத்து 997 பணத்தை எடுத்து விட்டனர். இது சம்பந்தமாக ஜூன் 1ல் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதுவரை நடவடிக்கை இல்லை. தற்போது லதா புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
