ADDED : மார் 31, 2026 10:22 PM
அ நிறம் | அளவு
தேனி:தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நேற்று பெரியகுளம் தொகுதியில் ரூ. 51 ஆயிரம், கம்பம் தொகுதியில் ரூ. 60 ஆயிரம் என மொத்தம் ரூ.1.11 லட்சம் பணம், 5.25லி., மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து நேற்று மாலை வரை 17 நாட்களில் ரூ. 1.40 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
