தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரூ.5 ஆயிரம் லஞ்சம் : வி.ஏ.ஓ., கைது

 ரூ.5 ஆயிரம் லஞ்சம் : வி.ஏ.ஓ., கைது

 ரூ.5 ஆயிரம் லஞ்சம் : வி.ஏ.ஓ., கைது


ADDED : ஜூன் 10, 2026 10:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 10:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ.5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர்.

சின்னமனுார் அருகே சின்ன ஒவுலாபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ் 55. சென்னையில் உள்ள இவரது மனைவியின் தங்கை லோகமணி, 2022ல் கம்பத்தில் நிலம் வாங்கினார். இதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்தபோது லோகமணிக்கு பதிலாக லோகராணி என பதிவானது.

இந்த பெயர் தவறை சரிசெய்யவும், தனது இடத்தல் 1 சென்ட் இடம் குறைவாக பதிவு செய்யப்பட்டதை சரிசெய்து தருமாறும் வி.ஏ.ஓ., கார்த்தியை 44, கனகராஜ் அணுகினார்.

கார்த்தி பெயர் திருத்தத்திற்கு ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார். கனகராஜ் லஞ்சம் தர மறுத்து தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார்.

திண்டுக்கல் டி.எஸ்.பி., நாகராஜ், இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று காலை 11:00 மணியளவில் ரசாயனம் தடவிய பணத்தை கனகராஜிடம் கொடுத்து அனுப்பினர். கார்த்தி ரூ. 5 ஆயிரத்தை பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us