/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆர்.எஸ்.எஸ்., துவக்க நாள் அணிவகுப்பு, ஊர்வலம்
/
ஆர்.எஸ்.எஸ்., துவக்க நாள் அணிவகுப்பு, ஊர்வலம்
ADDED : அக் 07, 2024 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: ஆர்.எஸ்.எஸ்., துவக்க நாளை முன்னிட்டு போடியில் அணிவகுப்பு ஊர்வலம் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்தது.
போடி ஜமீன்தார் வடமலை ராஜைய பாண்டியன், மாவட்டத் தலைவர் உதயகுமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
போடி நகரத் தலைவர் பாலசுப்பிரமணி வரவேற்றார். ஊர்வலம் போடி வள்ளுவர் சிலையில் துவங்கி காமராஜர் பஜார், குப்பிநாயக்கன்பட்டி, பரமசிவன் கோயில் ரோடு வழியாக வள்ளுவர் சிலை வளாகத்தை வந்தடைந்தது.
ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பலத்த பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டனர்.

