UPDATED : ஆக 15, 2026 07:03 PM
ADDED : ஆக 15, 2026 06:52 PM
தேனி:சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 130 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அம்பாசமுத்திரம் ஊராட்சியில் நடந்த கிராம சபையில் கலெக்டர் வைத்திநாதன் பங்கேற்றார். போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் சமபந்தி விருந்தில் பங்கேற்றார். கிராம சபை தாமதம்:
உப்பார்பட்டி ஊராட்சி அலுவலகத்தில கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் காலை 9:00 மணி முதல் காத்திருந்தனர். ஆனால் ஊராட்சி உதவியாளர் திலகவதி மதியம் 12:00 மணிக்கு வந்தார். தாமத்தால் பொதுமக்கள் பலரும் 2 மணி நேரம் காத்திருந்து சென்றனர். இதுபற்றி அங்கிருந்தவர்கள் திலகவதியிடம் கேட்டபோது, தப்புக்குண்டு ஊராட்சியில் தான் கிளர்க்காக உள்ளதாகவும், உப்பார்பட்டி கூடுதல் பணியாற்றுவதால் தாமதம் ஆனது என்றார்.
