/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மணல் திருட்டு: 5 பேர் மீது வழக்கு
/
மணல் திருட்டு: 5 பேர் மீது வழக்கு
ADDED : டிச 18, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: -: கடமலைக்குண்டு சிறப்பாறை அருகே ஓடையில் மணல் திருடப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் ரோந்து சென்றனர். அப்போது டிராக்டரில் திருட்டு மணலுடன் சிலர் சென்றுள்ளனர்.
அவர்களை பிடித்து விசாரித்த போது அங்கிருந்து 4 பேர் தப்பி ஓடினர். மயிலாடும்பாறை தென்பழனி காலனியைச் சேர்ந்த காவேரி ராஜா 42, என்பவரை கைது செய்தனர்.
அவருடன் இருந்து தப்பிச் சென்ற சிறப்பாறையைச் சேர்ந்த விருமாண்டி, வீரணன், நல்லு, செல்வம் ஆகியோரை கடமலைக்குண்டு போலீசார் தேடி வருகின்றனர். மணலுடன் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

