/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மணல் திருட்டால் மழைநீர் செல்வதில் சிரமம்
/
மணல் திருட்டால் மழைநீர் செல்வதில் சிரமம்
ADDED : ஜன 20, 2026 06:05 AM
போடி: போடி அருகே நாகலாபுரம் மல்லிங்கர்சாமி கரடு ஓடையில் மழைநீர் தடுப்புகளை உடைத்து மணல் திருட்டு நடந்து வருவதால் மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
போடி ஒன்றியம், நாகலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மல்லிங்கர் சாமி கரடு நீர்வரத்து ஓடை உள்ளது.
தொடர் மழை, 18ம் கால்வாய் நீர் திறக்கும் நாட்களில் மல்லிங்கர்சாமி கரடு ஓடையில் நீர்வரத்து இருக்கும். இதன் மூலம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைகின்றன.
தற்போது நாகலாபுரம் மல்லிங்கர்சாமி கரடு ஒட்டியுள்ள ஓடை பகுதியின் இரு புறமும் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். சிலர் ஓடை பகுதியில் கட்டப்பட்டு உள்ள மழைநீர் தடுப்புகளை உடைத்து மணல் திருடுகின்றனர்.
இதனால் மழைக் காலங்களில் ஓடையில் தண்ணீர் சீராக செல்லாமல் வீணாகிறது. விளை நிலங்களில் தண்ணீர் தேக்க முடியவில்லை.
நிலத்தடி நீர்மட்டமும் உயரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயிகள் பயனடையும் வகையில் மல்லிங்கர்சாமி கரடு ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சேதம் அடைந்த தடுப்புகளை சீரமைத்து, மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

