/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல்
/
மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல்
ADDED : நவ 14, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தெப்பம்பட்டி அருகே மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராஜதானி போலீசார் ரோந்து சென்றனர்.
வேலப்பர் கோயில் ரோட்டில் கணேசபுரம் பிரிவு அருகே டிரைலருடன் இணைந்த டிராக்டரில் ஒரு யூனிட் ஓடை மணல் கொண்டு சென்றனர். டிராக்டரை மறித்து போலீசார் விசாரித்தபோது மணல் கொண்டு செல்வதற்கான ஒப்புகை சீட்டு ஏதுமில்லை. இதனைத் தொடர்ந்து டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார். மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிராக்டரின் உரிமையாளர், டிரைவரை தேடி வருகின்றனர்.

