UPDATED : ஜூன் 21, 2026 05:45 PM
ADDED : ஜூன் 21, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
கடமலைக்குண்டு:மயிலாடும்பாறை அருகே வண்ணாத்திப்பாறை ஓடையில் மணல் திருட்டு நடப்பதாக கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.கண்ணன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர்.
அங்கு ட்ரெய்லருடன் கூடிய டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் சிறப்பாறையைச் சேர்ந்த சிவகுமார் 27, என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய மல்லையன் என்பவரை தேடி வருகின்றனர்.
