UPDATED : அக் 11, 2026 04:09 PM
ADDED : அக் 11, 2026 04:06 PM
ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலம் 450-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிகின்றனர். இவர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்க வில்லை என கூறி கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை க்கு பின் பணிக்கு திரும்பினர். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை, மீண்டும் சம்பளம் குறைந்து வழங்கப்படுவதாக நேற்று முன்தினம் காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் சுகாதார பணிகள் பாதித்தனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு துாய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
