ADDED : ஆக 16, 2026 12:06 AM
அ நிறம் | அளவு
தேனி: தபால் துறை சார்பில் தீன்தயாள் ஸ்பார்ஷ் யோஜன கல்வி உதவி தொகை திட்டம் தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
6 முதல் 9ம் வகுப்பு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தபால் தலை சேகரிப்பு சங்க உறுப்பினர், அல்லது சேகரிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். இருதேர்வுகள் நடத்தப்படும். இதில் தேர்வாகுபவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்களை www.tamilnadupost.nic.in இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 'தபால் கோட்ட கண்காணிப்பாளர், தேனி தபால் கோட்டம், தேனி 625 531 என்ற முகவரிக்கு செப்., 1க்குள் அனுப்ப வேண்டும். என கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.
