/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு
/
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு
ADDED : அக் 08, 2025 08:12 AM
போடி : தபால் துறை சார்பில் தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா திட்டத்தின் கீழ் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கவும், எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், 'தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் மூலம் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு ஆண்டு தோறும் நடந்து வருகிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.6000 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதனை ஒட்டி நேற்று போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் தபால் துறை உதவி அலுவலர்கள் சூர்யா, கார்த்திகா மேற்பார்வையில் மாணவர்கள் 25 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் நடப்பு நிகழ்வுகள், சமூக அறிவியல், விளையாட்டு, கலாச்சாரம், அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த வினாக்கள் ஆங்கில மொழியில் கேட்கப்பட்டு இருந்தன. இதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியைகள் சந்திரகலா, முத்துலட்சுமி வழங்கினர்.