
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி முத்துக்கிருஷ்ணாபுரம் ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியின் விளையாட்டு, ஆண்டு விழாக்கள் நடந்தன. இரு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் முருகன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் கயல்விழி, முதல்வர் ராஜேஸ்வரி, பள்ளி ஆலோசகர் அஜ்மல்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகைகள் பூர்ணிமா, நளினி ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
ஏராளமானோர் பங்கேற்றனர்.