நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ., மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்வியியல், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் சார்பில் 34 ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.
கல்வி நிறுவனங்களின் தாளாளர் வச்சிரவேல் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., ராமலிங்கம், மாவட்ட வன அலுவலர் சமர்தா, ஆண்டிபட்டி வனச்சரக அலுவலர் அருள்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி, விளையாட்டு மற்றும் பல்வேறு கலைகளில் சிறந்த மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர்கள் சாந்தி, ரவிச்சந்திரன், டாக்டர் தங்கவேல் உட்பட பலர் செய்திருந்தனர்.