நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடந்தது.
தலைமை ஆசிரியர் சின்னராஜா, பேரூராட்சி தலைவர் நடேசன், பசுமை வடுகை அறக்கட்டளை ஆலோசகர் செல்வக்குமார பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
உதவி தலைமை ஆசிரியர் கவுதம் அசோக்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜோதி, பேரூராட்சி துணை தலைவர் அழகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேனி எல்.எஸ்.மில்ஸ் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், பள்ளிக்கு நூறு சதவீதம் வருகை, விளையாட்டில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் பிரபு நன்றி கூறினார்.

