நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: லோயர்கேம்ப் அரசு துவக்கப்பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜான்சன், சங்கு முத்தையா, வட்டார கல்வி அலுவலர்கள் மகாலட்சுமி, இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.மகாராஜன், தி.மு.க., நகர செயலாளர் லோகந்துரை, நகராட்சி தலைவர் பத்மாவதி பரிசு வழங்கினர்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சிவாஜி, மணிகண்டன் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

