
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி முத்துத்தேவன்பட்டியில் உள்ள மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா நடந்தது. பள்ளியின் செயலாளர் அருண்குமார் வரவேற்றார்.
உறவின்முறைத் தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
சப் கலெக்டர் ரஜத் பீட்டன், டாக்டர் ஜோ பிரதீப் பங்கேற்று பேசினர். பள்ளியின் முதல்வர் சுபா ஈஸ்வரி ஆண்டி அறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
உறவின் அனைத்துக்கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளியின் இணைச்செயலாளர் விக்னேஷ்பிரபு நன்றி கூறினார்.

