ADDED : ஜன 26, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அல் ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் நிர்வாக குழு தலைவர் ரபீக் தீன் தலைமை வகித்தார். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. செய்யது முகமது முன்னிலை வகித்தார்.
தன்னம்பிக்கை பேச்சாளர் மதுரை ராமகிருஷ்ணன், உலக கேரம் சாம்பியன் மித்ரா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் யோகா, கராத்தே, சிலம்பம் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மாணவர்கள் நடனம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
விழா ஏற்பாடுகளை பள்ளியின் செயலர் டாக்டர் முகமது சைபுல் செய்திருந்தார்.பள்ளி முதல்வர் நூருல் ஷிபா, ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.
