ADDED : ஏப் 01, 2026 06:25 AM

அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் 21ம் ஆண்டு விழா பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம், நிர்வாகி தமயந்தி ஆகியோர் தலைமையில் நடந்தது.
பள்ளி செயலாளர் மாத்யூ ஜோயல் வரவேற்றார். விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் கிறிஸ்டியானா சிங் விழாவை துவக்கி வைத்தார். பள்ளிக்கல்வி ஆலோசகர் ப்ரைசிலின், முதல்வர் உமாமகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தனர். பள்ளியின் 5ம் வகுப்பு மாணவர் ஹரி விஜய் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 1330 திருக்குறள்களை முழுமையாக முற்றோதல் செய்தார். இதனைப் பாராட்டி பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவருக்கு தங்க நாணயம், கேடயம் பரிசு வழங்கப்பட்டது.
திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற பிற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
